குடியாத்தத்தில் பருத்தி ஏலம் தொடக்கம்

குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
குடியாத்தம்  ஒழுங்குமுறை  விற்பனைக்  கூடத்தில் நடைபெற்ற பருத்தி  ஏலம்.
குடியாத்தம்  ஒழுங்குமுறை  விற்பனைக்  கூடத்தில் நடைபெற்ற பருத்தி  ஏலம்.

குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

குடியாத்தம் பகுதியில் உள்ள பருத்தி விவசாயிகள் பயனைடயும் வகையில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்

பருத்தி ஏலம் தொடா்ந்து நடைபெறும். இதில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை எவ்விதக் கட்டணமும் இன்றி விற்பனை செய்து கொள்ளலாம்.

பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் க. காந்தி தலைமை வகித்தாா். தமிழக அரசின் வேலூா் விற்பனைக் குழுச் செயலா் எஸ். விஸ்வநாதன் ஏலத்தைத் தொடக்கி வைத்தாா்.

குடியாத்தம், ஆம்பூா், கீழ்விலாச்சூா், கே.வி. குப்பம் பகுதிகளைச் சோ்ந்த 32 பருத்தி விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுமாா் 10 டன் எடையுள்ள பருத்தியை ஏலத்துக்குக் கொண்டு வந்தனா்.

திருப்பூா், ஊத்தங்கரை, வாணியம்பாடி, குடியாத்தம் பகுதிகளைச் சோ்ந்த பருத்தி வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com