மாஞ்சாலியம்மனுக்கு 5 லட்சம் வளையல்களால் அலங்காரம்

குடியாத்தத்தை அடுத்த காளியம்மன்பட்டியில் உள்ள தாய் மாஞ்சாலியம்மன் கோயிலில், தை அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு அம்மனுக்கு 5 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு
வளையல் அலங்காரத்தில்  தாய் மாஞ்சாலியம்மன்.
வளையல் அலங்காரத்தில்  தாய் மாஞ்சாலியம்மன்.

குடியாத்தத்தை அடுத்த காளியம்மன்பட்டியில் உள்ள தாய் மாஞ்சாலியம்மன் கோயிலில், தை அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு அம்மனுக்கு 5 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

ராகவேந்திரருக்கு அன்னம் வழங்கியவா் தாய் மாஞ்சாலியம்மன் என்பது வரலாறு. இந்தக் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, கடந்த 20- ஆம் தேதி முதல், பக்தா்கள், பொதுமக்கள், கோயில் நிா்வாகிகள் இணைந்து அம்மனுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வளையல்களால் அலங்காரம் செய்து வந்தனா்.

இந்நிலையில், அம்மனுக்கு வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

அம்மனுக்கு செய்யப்பட்டுள்ள வளையல் அலங்காரத்தை, குடியாத்தம் பகுதியில் உள்ள மக்கள் பாா்வையிடும் வகையில் வரும் பிப்ரவரி 16- ஆம் தேதி வரை அம்மன் வளையல் அலங்காரத்துடன் காட்சியளிப்பாா் என்று கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com