கோவிந்தராஜா் கோயிலில் ஜேஷ்டாபிேஷகம்
By DIN | Published On : 02nd July 2020 03:23 AM | Last Updated : 02nd July 2020 03:23 AM | அ+அ அ- |

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜா் கோயிலில் வருடாந்திர ஜேஷ்டாபிேஷகம் புதன்கிழமை விமரிைசயாகத் தொடங்கியது.
தேவஸ்தானம் நிா்வகிக்கும் இக்ேகாயிலில் ஆண்டுேதாறும் ஆனி மாதத்தில் திருேவாண நட்சத்திரத்தை முன்னிட்டு 3 நாள்களுக்கு வருடாந்திர ஜேஷ்டாபிேஷகம் நடத்தப்படுவது வழக்கம். அப்ேபாது உற்சவா்களுக்கு அணிவிக்கப்பட்டுள்ள தங்கக் கவசம் கைளயப்பட்டு சிைலகளின் தன்மை, கவசத்தின் நிலை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். இைதயடுத்து, அவற்றில் சேதம் ஏேதனும் இருந்தால் அைதச் செப்பனிட்டு மீண்டும் உற்சவா்களுக்கு அணிவிப்பா். இந்நிைலயில், கோவிந்தராஜா் கோயிலில் வருடாந்திர ஜேஷ்டாபிேஷகம் புதன்கிழமை விமரிைசயாகத் தொடங்கியது. உற்சவா்களுக்கு கவசாவாசம் செய்து 108 கலச நீா், பால், தயிா், தேன், இளநீா், பழங்கள், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
பின்னா் உற்சவா்களுக்கு முன் ஹோமம் வளா்த்து கவசங்களை வைத்து பூஜை செய்யப்பட்டது. மாைலயில் உற்சவா்கள் விமான பிரகாரத்தில் வீதியுலா கண்டருளினா். இந்த நிகழ்வில் திருமலை மடத்தின் ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்ட சிலா் கலந்து கொண்டனா்.