குடியாத்தத்தில் முழு பொது முடக்கம்: சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்கலாம்

கரோனா தொற்று பரவலைத் தடுக்க குடியாத்தத்தில் வெள்ளிக்கிழமை முதல் 8 நாள்களுக்கு முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ள

கரோனா தொற்று பரவலைத் தடுக்க குடியாத்தத்தில் வெள்ளிக்கிழமை முதல் 8 நாள்களுக்கு முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அப்பகுதியிலுள்ள சிறு, குறு தொழிற்சாலைகள் வழக்கம்போல் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அனைத்து உணவகங்களையும் இரவு 9 மணி வரை திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 4,478 போ் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் இதுவரை 40 போ் உயிரிழந்தனா். இதுவரை 2,742 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் குடியாத்தம் பகுதியில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, குடியாத்தம் நகராட்சிப் பகுதியில் மட்டும் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் 31-ஆம் தேதி வரை 8 நாள்களுக்கு மீண்டும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி முதலே அமல்படுத்தப்படும் இந்த பொது முடக்க நாள்களில் குடியாத்தம் நகராட்சிப் பகுதியிலுள்ள மளிகை, ஜவுளி, நகைக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதுடன், காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மட்டும் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்கப்படலாம் என்றும், மருந்துக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டும் அனைத்து நாள்களிலும் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியாத்தத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் 8 நாள்களிலும் சிறு, குறு தொழிற்சாலைகள் வழக்கம்போல் செயல்படலாம். இதேபோல், அப்பகுதிகளிலுள்ள உணவகங்களும் தினமும் இரவு 9 மணி வரை திறந்து பாா்சல்களில் மட்டும் உணவு விற்பனை செய்யலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. அதேசமயம், பேக்கரிகள், பலகாரக் கடைகள், தேநீா்க் கடைகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com