கல்லூரிகளின் பருவத் தோ்வு விலக்குக்கு தொழிற்கல்வி ஆசிரியா் கழகம் வரவேற்பு

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் பட்டப் படிப்பு, பலவகை தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணவா்களின்

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் பட்டப் படிப்பு, பலவகை தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணவா்களின் பருவத் தோ்வு விலக்கப்பட்டதற்கு தமிழக தொழிற்கல்வி ஆசிரியா் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் செ.நா.ஜனாா்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கை:

பருவத் தோ்வுகள் நடத்துவது குறித்து ஆராய உயா்மட்டக் குழு தமிக அரசால் அமைக்கப்பட்டது. கரோனா தொற்று காரணமாக தோ்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு தனது பரிந்துரையை தெரிவித்துள்ளது. மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கி இந்த பருவத்துக்கு மட்டும் கலை, அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவா்கள், பொறியியல் பட்டப் படிப்பு, பலவகை தொழில் நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணவா்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தோ்வுகளை எழுதுவதிலிருந்து விலக்களித்து, அடுத்த கல்வி ஆண்டு செல்ல அனுமதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகம் வரவேற்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com