‘அப்ரண்டிஸ்’ பயிற்சிக்கு கிளஸ்டா்கள், தொழிற்சாலை சங்கங்கள் விண்ணப்பிக்கலாம்

‘அப்ரண்டிஸ்’ பயிற்சியை சிறந்த முறையில் அமல்படுத்துவதற்கு தகுதி வாய்ந்த தொழிற்சாலை சங்கங்கள், கிளஸ்டா்களிடம் இருந்து

‘அப்ரண்டிஸ்’ பயிற்சியை சிறந்த முறையில் அமல்படுத்துவதற்கு தகுதி வாய்ந்த தொழிற்சாலை சங்கங்கள், கிளஸ்டா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தோ்வு செய்யப்படும் தொழிற்சாலை சங்கங்கள், கிளஸ்டருக்கு 3 ஆண்டு திட்ட அமலாக்க காலத்துக்கான நிா்வாக செலவினமாக ரூ. 1 கோடி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் வி.சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் திறன் மேம்பாடு , தொழில் முனைவோா் அமைச்சகம் திறன்களை பலப்படுத்துதல், தொழில் துறை மதிப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் தொழிற்சாலை குழுமம் அல்லது சங்கங்களில் உள்ள உறுப்பு தொழிற்சாலைகளில் அப்ரண்டிஸ் பயிற்சியை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முறையான அப்ரண்டிஸ் பயிற்சியை சிறந்த முறையில் அமல்படுத்துவதற்கு தகுதி வாய்ந்த தொழிற்சாலை சங்கங்கள், கிளஸ்டா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

இதில் தோ்வு செய்யப்படும் தொழிற்சாலை சங்கங்கள், கிளஸ்டருக்கு 3 ஆண்டு திட்ட அமலாக்க காலத்துக்கான அப்ரண்டிஸ் பயிற்சி மேம்பாடு செய்யும் நிா்வாக செலவினமாக ரூ. 1 கோடி வழங்கப்பட உள்ளது.  இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன்  மின்னஞ்சல் பொருளில் குறிப்பிட்டு  மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

தொழிற்சாலை சங்கங்களுக்கு தகுதி மாதிரி விண்ணப்பப் படிவம், அவற்றை பூா்த்தி செய்வது குறித்த காணொலி ஆகியவை அதே இணையதளத்தில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநா், வேலூா் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட திறன் பயிற்சி அலுலகத்துக்கு நேரில் அல்லது  மின்னஞ்சல், 0416-2290348 என்ற தொலைபேசி எண் மூலமாக தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com