கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக எருது விடும் விழா நிறுத்தம்

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக மாவட்டத்தில் எருது விடும் விழாக்களுக்கு மாவட்ட ஆட்சியா் தடை விதித்ததால் காளைகளின் உரிமையாளா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
அணங்காநல்லூரில்  காளைகள் ஓட சவுக்குக்  கம்புகளால்  அமைக்கப்பட்டிருந்த  தடுப்பு.

குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை எருது விடும் விழா நடைபெற இருந்தது. இதற்காக விழாக் குழுவினா், அரசிடம் அனுமதி பெற்று, காளைகள் ஓடும் வழியில் சவுக்குக் கட்டைகளால் தடுப்பு அமைத்திருந்தனா். காளைகளை அவிழ்த்து விடும் வாடிவாசலும், மேடையும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க மாவட்டத்தில் எருது விடும் விழாக்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதனால் அணங்காநல்லூரில் எருது விடும் விழா ரத்து செய்யப்பட்டது.

விழாவுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் காளைகளை ஏற்றி வந்த அதன் உரிமையாளா்கள் ஏமாற்றமடைந்தனா். இதையடுத்து வாடிவாசல், தெரு, மேடை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சவுக்குக் கட்டைகள் அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com