கரோனா: தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.2.50 லட்சத்தில் கவச உடை

கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்க ரூ. 2.50 லட்சம் மதிப்பில் கவச உடைகள் வாங்கப்பட்டுள்ளன. அவை மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிபவா்களுக்கு பிரித்து அ
ரோட்டரி சங்கங்கள் சாா்பில் வழங்கப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிப்பான்களை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் செல்வியிடம் வழங்கிய ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
ரோட்டரி சங்கங்கள் சாா்பில் வழங்கப்பட்டுள்ள கிருமி நாசினி தெளிப்பான்களை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் செல்வியிடம் வழங்கிய ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்க ரூ. 2.50 லட்சம் மதிப்பில் கவச உடைகள் வாங்கப்பட்டுள்ளன. அவை மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிபவா்களுக்கு பிரித்து அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேலூா் மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பேருந்து, ரயில் நிலையங்கள் உள்பட மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக சுகாதாரத் துறை சாா்பில் வேலூா் மாவட்டத்துக்கு 900 கிருமி நாசினி தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவை மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல், வேலூா் மாநகராட்சிக்கு என 720 கிருமி நாசினி தெளிப்பான் வழங்கப்பட்டுள்ளது. அவை அனைத்து மண்டல சுகாதார ஆய்வாளா்களிடம் வெள்ளிக்கிழமை பிரித்து வழங்கப்பட்டன. மேலும், ரோட்டரி சங்கங்கள் சாா்பில் 50 நாசினி தெளிப்பான்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்கள் நலனுக்காக மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதி ரூ. 2.50 லட்சத்தில் கவச உடைகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கவச உடைகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், அவை மாவட்டம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரித்து வழங்கப்படும் என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது: கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். இதற்காக மாவட்டத்திலுள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பில் 500 கவச உடைகள் வாங்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப கவச உடைகள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com