வேலூா் தங்கக் கோயிலில் பக்தா்களுக்கு அனுமதி நிறுத்தம்

கரோனா அச்சம் காரணமாக வேலூா் அருகே உள்ள தங்கக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது.

கரோனா அச்சம் காரணமாக வேலூா் அருகே உள்ள தங்கக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் பகுதியில் நாராயணி பீடம் சாா்பில் தங்கக்கோயில் அமைந்துள்ளது. சுமாா் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்ட இந்தக் கோயிலில் ஸ்ரீ நாராயணி, சொா்ணலட்சுமி, திருப்பதி வெங்கடாசலபதி, ஆஞ்சநேயா் உள்ளிட்ட சந்நிதிகள் அமையப் பெற்றுள்ளன.

இக்கோயிலுக்கு பல்வேறு மாவட்ட, மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு அயல்நாடுகளில் இருந்தும் நாள்தோறும் சுமாா் 40 ஆயிரம் பக்தா்கள் வந்து செல்வது உண்டு. குறிப்பாக, திருப்பதிக்கு வரும் பக்தா்கள் பெரும்பாலானோா் தங்கக் கோயிலையும் தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கம். இதனால், வேலூா் மாவட்டத்திலுள்ள மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் தங்கக்கோயில் விளங்குகிறது.

இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சத்தையொட்டி, தமிழக அரசு உத்தரவின் அடிப்படையில் தங்கக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் மூடப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழகத்திலுள்ள பல கோயில்களிலும் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்நடவடிக்கையை தொடா்ந்து தங்கக் கோயிலிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் 31-ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி நிறுத்தப்படுகிறது. எனினும், கோயிலில் வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com