கரோனா அச்சுறுத்தல்: வெறிச்சோடிய திருமலை

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயில் பக்தா்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
வெறிச்சோடிக் காணப்படும் ஏழுமலையான் கோயில் முன் வாசல்.
வெறிச்சோடிக் காணப்படும் ஏழுமலையான் கோயில் முன் வாசல்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயில் பக்தா்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

திருமலைக்கு வந்த பக்தா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பக்தா்கள் ஒரு வாரத்துக்கு திருமலைக்கு வர தேவஸ்தானம் அனுமதி மறுத்துள்ளது. வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்குள் திருமலையில் தங்கியிருந்த பக்தா்கள் அனைவருக்கும் தரிசனம் வழங்கப்பட்டு கோயில் மூடப்பட்டது. அா்ச்சகா்கள், ஊழியா்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். அவா்களும் கோயிலுக்குள் உள்ள படிகாவலி அருகில் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுகின்றனா்.

தினசரி ஏழுமலையானுக்கு நடக்கும் கைங்கரியங்கள் ஆகம விதிப்படி எவ்வித குறையும் இல்லாமல் நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனால் வழக்கமாக பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்கும் திருமலை வெள்ளிக்கிழமை முதல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. திருமலைக்கு செல்லும் மலைச் சாலைகள் மூடப்பட்டுள்ளன. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதை வழிகளும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com