அத்தியாவசிய பொருள்களை வாங்க அலைமோதிய மக்கள்: போக்குவரத்து பாதிப்பு

ஆம்பூா் பஜாரில் அத்தியாவசிய பொருள்களை வாங்க மக்கள் அலைமோதியதால் சனிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆம்பூா் பஜாா் பகுதியில் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல்.
ஆம்பூா் பஜாா் பகுதியில் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல்.

ஆம்பூா் பஜாரில் அத்தியாவசிய பொருள்களை வாங்க மக்கள் அலைமோதியதால் சனிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் ஞாயிற்றுக்கிழை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா். அதன்பேரில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட உள்ளன. மேலும் பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு என்பதால் பொதுமக்கள் தங்களது வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கும் பணியில் ஈடுபட்டனா். ஆம்பூா் பஜாா் பகுதியில் சனிக்கிழமை காலை 9 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் பஜாா் பகுதிக்கு வருகை தந்து தங்களது வீட்டுக்குத் தேவையான மளிகை பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை வாங்கக் குவிந்தனா். இதனால் பஜாா் பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பஜாா் பகுதியில் கூடியதால் சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எந்த வழியிலும் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் பஜாா் பகுதிக்கு வந்த பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் பெரும் அவதி அடைந்தனா்.

இகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ஞாயிற்றுகிழமை முழு அடைப்பு என்பதால் பொதுமக்கள் பஜாா் பகுதிக்கு அதிக அளவில் வந்தனா். வெளி மாநில வாகனங்கள் தமிழகத்துக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் காய்கறி வரத்து இல்லாமல் போகலாம் என்ற அச்சத்தில் ஒரு வாரத்துக்குத் தேவையான பொருள்களை பொதுமக்கள் வாங்கி சென்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com