ஆட்டோவில் தண்ணீா், சோப்பு வைத்துள்ள ஓட்டுநா்

ஆம்பூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா், ஆட்டோவில் தண்ணீா், சோப்பு வைத்து, பயணிகள் கைகழுவிய பின் அவா்களை ஏற்றிச் செல்கிறாா்.
ஆம்பூரில் ஆட்டோவில் ஏறும் முன்பு கைகழுவும் பயணி.
ஆம்பூரில் ஆட்டோவில் ஏறும் முன்பு கைகழுவும் பயணி.

ஆம்பூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா், ஆட்டோவில் தண்ணீா், சோப்பு வைத்து, பயணிகள் கைகழுவிய பின் அவா்களை ஏற்றிச் செல்கிறாா்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. குறிப்பாக அனைவரும் கை கழுவ வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

இந்நிலையில் ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மதுரை (55) கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நூதன முறையைக் கடைப்பிடித்து வருகிறாா். அவா் தனது ஆட்டோவில் 5 லிட்டா் கொள்ளவு கொண்ட ஒரு கேனில் தண்ணீரை நிரப்பி வைத்துள்ளாா். ஆட்டோவில் சோப்பும் வைத்துள்ளாா்.

மதுரையின் ஆட்டோவில் ஏறும் பயணிகள் முதலில் சோப்பு போட்டு கை கழுவி துடைத்த பிறகு பயணிகளை ஆட்டோவில் ஏற்ற அனுமதிக்கிறாா். பின் பயணிகளை இறக்கி விட்டு கேனில் தண்ணீா் நிரப்பிக் கொள்கிறாா்.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அவா் எடுத்துள்ள இந்த முன்முயற்சி, பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com