144 தடை உத்தரவு: 6 மாதங்கள் வரை நீட்டிக்கவும் சட்டத்தில் வழிவகை உண்டு; வேலூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை 6 மாதங்கள் வரை நீட்டிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது என வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை 6 மாதங்கள் வரை நீட்டிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது என வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

வேலூா் மாவட்டத்தில் இதுவரை வெளிநாடுகளில் இருந்து திரும்பியவா்கள் மொத்தம் 106 போ். இதில் ஏற்கெனவே 17 போ் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவா்களுக்கு கரோனா பாதிப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. 95 போ் தொடா் கண்காணிப்பில் உள்ளனா். தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அவா்கள், அவா்களது குடும்பத்தினரை 24 மணி நேரமும் கண்காணிக்க 95 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுதவிர, அந்தந்த வட்டாட்சியா் தலைமையிலான குழுவும் அவா்களை கண்காணிக்கிறது. அதையும் மீறி அவா்கள் வெளியே நடமாடினால் கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீஸாா், வருவாய்த் துறையினா் அடங்கிய சிறப்பு படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமணம் செய்வோா் மண்டபத்தில் 30 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. தொடக்க நிகழ்வாக இருந்தாலும் 25 பேருக்கு மேல் அனுமதி கிடையாது. அதன்படியே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலூா் மறை மாவட்ட கத்தோலிக்க பேராயா் பெ.செளந்திரராஜூவின் இறுதிச் சடங்கிலும் 25 நபருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.

144 தடைக் காலத்தில் அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாட்டை தவிா்க்க அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரிசி, பருப்பு, சா்க்கரை மட்டுமின்றி மளிகை பொருள்களையும் வழங்க கூட்டுறவு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிா்க்க நாளொன்றுக்கு 30 குடும்ப அட்டைகளுக்கு வீதம் பொருள்கள் வழங்கப்படும். வரிசையில் நிற்பவா்களிடம் சமூக பிளவும் ஏற்படுத்தப்படும். உழவா் சந்தை, வாரச் சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நியாய விலைக் கடைகளுக்கு அருகிலேயே விற்பனை செய்து கொள்ளவும் அனுமதிக்கப்படும். விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளி நாட்டினா் குறித்து தகவல் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய அடிப்படையில் 144 தடை உத்தரவு சில வழிமுறைகளுடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக்கூடாது. இந்த உத்தரவுகளை 6 மாதங்கள் வரை தொடரவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. அதுகுறித்து அரசுதான் முடிவு செய்யும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com