நேரக் கட்டுப்பாட்டுடன் காய்கறி விற்பனைக்கு அனுமதி

நேரக் கட்டுப்பாடுடன் வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் காய்கறி விற்பனைக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்து உள்ளது.


வேலூா்: நேரக் கட்டுப்பாடுடன் வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் காய்கறி விற்பனைக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்து உள்ளது.

கரோனாநோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள வாரச்சந்தைகள், உழவா் சந்தைகளும் மூடப்பட்ட நிலையில், வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் தொடா்ந்து காய்கறி வியாபாரம் நடைபெற்றது. இதனால், மக்கள் அங்கு காய்கறிகளை வாங்கிச் சென்றனா். நேதாஜி மாா்க்கெட்டையும் மூட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி மாா்க்கெட்டில் இருந்த வியாபாரிகள் வெளியேற்றப்பட்டு வியாபாரம் நிறுத்தப்பட்டது.

பின்னா், காய்கறி வியாபாரிகள் ஆட்சியரை நேரில் சந்தித்து காய்கறி வியாபாரத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரும்படி வேண்டுகோள் விடுத்தனா். இதையடுத்து, பழைய பேருந்து நிலையத்தில் காய்கறி வியாபாரம் செய்து கொள்ள ஆட்சியா் அனுமதி அளித்ததுடன், காலை 5 மணிக்கு முன்பாக காய்கறி மொத்த வியாபாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே சில்லறை விற்பனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டாா். காய்கறி வாங்க வருவோா் சமூக விலகலைப் பின்பற்றும் வகையில் கடைகளின் முன்பு இடைவெளியுடன் கூடிய கட்டங்கள் வரையப்பட்டு அதனை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

இதனடிப்படையில், பழைய பேருந்து நிலையத்தில் 200 போ் காய்கறி வியாபாரத்தில் ஈடுபடும் வகையில் கட்டங்கள் வரையும் பணியில் மாநகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com