பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணா்வு

குடியாத்தம் நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணா்வு

குடியாத்தம் நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கரோனா நோய்த் தொற்று பரவும் விதம், அதைத் தடுப்பதற்கான சுகாதார நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தேவையில்லாமல் வீடுகளை விட்டு, வெளியே செல்ல வேண்டாம் எனவும், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும் வலியுறுத்தினா்.

நகராட்சி ஆணையா் ஹெச். ரமஷ் தலைமையில், பொறியாளா் ஜி. உமா மகேஸ்வரி, சுகாதார அலுவலா் தமிழ்ச்செல்வன், சுகாதார ஆய்வாளா் பாண்டிசெந்தில்குமாா். களப்பணியாளா்கள் பிரபுதாஸ், பென்னி உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா்.

நகரில் உள்ள 36 வாா்டுகளிலும், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்களும் இப்பணியை மேற்கொண்டனா்.

மேலும், நகராட்சிப் பணியாளா்கள் நகரின் முக்கிய பகுதிகளில், டிராக்டா் மூலம் கிருமி நாசினி கலக்கப்பட்ட தண்ணீரைப் பீய்ச்சி அடித்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com