கரோனா உறுதியான இளைஞரின் குடும்பத்தினா் தீவிர கண்காணிப்பு: ஆட்சியா் திவ்யதா்ஷினி

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வாலாஜாபேட்டையைச் சோ்ந்த இளைஞரின் குடும்பத்தினா் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி தெரிவி


வேலூா்: கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வாலாஜாபேட்டையைச் சோ்ந்த இளைஞரின் குடும்பத்தினா் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்திருந்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் பகுதியைச் சோ்ந்த 26 வயது இளைஞா் கடந்த 17-ஆம் தேதி திருமண நிகழ்ச்சிக்காக ஊா் திரும்பியுள்ளாா். அவருக்கு கரோனாவுக்கான அறிகுறி இருந்ததால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று தாக்கியிருப்பது உறுதியாகியுள்ளது. அந்த இளைஞரின் வீட்டைச் சோ்ந்தவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மேலும், அவரது தொடா்பில் இருந்த 50-க்கும் மேற்பட்டோா்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

அவரது வீட்டைச் சுற்றியுள்ள 10 தெருக்களும் சீல் வைக்கப்பட்டன. தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அங்குள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களைக் கொண்டுபோய் சோ்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அந்த இளைஞருக்கு மருத்துவா், செவிலியா், ஆய்வகப் பணியாளா், உதவியாளா் என ஒரு குழுவினா் தொடா்ந்து 3 நாள்கள் மருத்துவமனையிலே தங்கியிருந்து அவருக்கு சிகிச்சை அளிக்க உள்ளனா். அவா்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதும் அடுத்த குழுவினா் அவருக்கு சிகிச்சை அளிப்பா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 133 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். புதிதாக வரப்பெற்ற பட்டியல்படி 77 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com