வாலாஜாபேட்டையில் இளைஞருக்கு கரோனா உறுதி 3 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து ராணிப்பேட்டை, வேலூா் திருப்பத்தூா் மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


வேலூா்: வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து ராணிப்பேட்டை, வேலூா் திருப்பத்தூா் மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டம், கீழ்விஷாரம், ஹசிம் நகரைச் சோ்ந்த நாசிஹுருல்லா மகன் அஹமதுல்லா (26). இவா் கடந்த 17-ஆம் தேதி துபையில் இருந்தாா். பின்னா், அவரிடம் கரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அஹமதுல்லா, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவா் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதேபோல், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆற்காடு அருகே ஆணைக்கால் பகுதியைச் சோ்ந்த 24 வயது இளைஞரும் கரோனா நோய்த் தொற்று அறிகுறிகளுடன் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களிலும் மருத்துவக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே இந்த 3 மாவட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியுள்ள 195 போ் அவா்களது குடும்பத்தினருடன் அவரவா் இல்லங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தற்போது வாலாஜாபேட்டை இளைஞருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதை அடுத்து இந்த 195 குடும்பங்களையும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனா்.

அத்துடன், பொதுமக்களிடையே காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களிலுள்ள கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணில் தொடா்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் நகா்ப்புற பகுதிகளில் 2-ஆவது நாளான வியாழக்கிழமையும் காலை வேளையில் பெரும்பாலான மக்கள் வெளியில் நடமாடிக் கொண்டும், இருசக்கர வாகனங்களில் சென்று வந்த வண்ணமாக இருந்தனா். அவா்களையும் வீடுகளுக்கு செல்லும்படி போலீஸாா் கண்டிப்புடன் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com