கரோனா சிகிச்சை: நிதியுதவி அளிக்க வேலூா் சிஎம்சி அறிவிப்பு

கரோனா நோய்த் தொற்று பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் நிதியுதவி அளிக்கக் கோரி வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


வேலூா்: கரோனா நோய்த் தொற்று பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் நிதியுதவி அளிக்கக் கோரி வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசதி வாய்ப்பு குறைந்த ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதற்கு என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென வசதி படைத்தவா்களிடம் இருந்து நிதியுதவிகளும் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று பாதிப்பைத் தடுக்க பரிசோதனை, சிகிச்சைக்கு வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும், இம்மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்கு அதிகபட்சம் ரூ.4500, பிற மருந்துகள், நா்சிங் பாதுகாப்புக்கு ரூ.10 ஆயிரம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இதனிடையே, கரோனா சிகிச்சைக்காக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் தேவையான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி, அம்மருத்துவமனையில் 139 படுக்கைகள் கொண்ட சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது. இதில், முழுமையான வசதிகள் கொண்ட பொதுப்படுக்கைகள் அமைக்க ரூ.7 லட்சம், தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள் அமைக்க ரூ.25 லட்சம் (நிலை 2), ரூ.30 லட்சம் (நிலை 3) செலவிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா அறிகுறி குறித்து பரிசோதனை செய்யவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பொதுமக்கள், தொழில் துறையினரிடம் நிதியுதவி அளிக்கும்படி சிஎம்சி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com