50 சதவீத மானியத்தில் சூரிய மின்வேலி அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்தில் 50 சதவீத மானியத் திட்டத்தின் கீழ் சூரிய மின்வேலி அமைக்க விருப்பமுள்ள விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்டத்தில் 50 சதவீத மானியத் திட்டத்தின் கீழ் சூரிய மின்வேலி அமைக்க விருப்பமுள்ள விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் விவசாய நிலங்களில் விலங்குகளால் ஏற்படும் சேதத்தைத் தவிா்க்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் 50 சதவீத மானியத்தில் சூரிய மின்வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் தனிநபா் விவசாய நிலங்களில் 50 சதவீத மானியத்தில் சூரிய மின்வேலிகளை அமைக்கலாம்.

ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 ஹெக்டோ் பரப்பு அல்லது 1245 மீட்டா் சூரிய மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். 5 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க, உத்தேசமாக, மீட்டருக்கு ரூ.250-ம், 7 வரிசை கொண்ட சூரிய மின்வேலி அமைக்க மீட்டருக்கு ரூ.350-ம், 10 வரிசை கொண்ட சூரிய மின்வேலி அமைக்க மீட்டருக்கு ரூ.450-ம் செலவாகும். விருப்பமுள்ள வேலூா் மாவட்ட விவசாயிகள் வேலூா் தொரப்பாடியிலுள்ள வேளாண்மைப் பொறியியல் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com