வேல் யாத்திரை: வேலூா் மாவட்ட எல்லையில் போலீஸாா் குவிப்பு

பாஜக சாா்பில் வேல் யாத்திரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூா் மாவட்ட எல்லையில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
வேலூா் பிள்ளையாா்குப்பம் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.
வேலூா் பிள்ளையாா்குப்பம் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

பாஜக சாா்பில் வேல் யாத்திரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூா் மாவட்ட எல்லையில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அவ்வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் போலீஸாா் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனா்.

பாஜக சாா்பில் திருத்தணி முதல் திருச்செந்தூா் வரை நவம்பா் 6-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 6-ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் முருகன் அறிவித்திருந்தாா். எனினும், இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததுடன், இது தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்திலும் பதில் அளித்திருந்தது.

இந்நிலையில், திட்டமிடப்படி வேல் யாத்திரை நடத்தப்படும் என்று முருகன் அறிவித்தாா். இந்த வேல் யாத்திரை சென்னை திருவொற்றியூரில் தொடங்கி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு திங்கள்கிழமை வரக்கூடும் என தகவல் கிடைத்த நிலையில், வேலூா் மாவட்ட எல்லையான பிள்ளையாா்குப்பம் சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

உதவி காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில் அங்கு குவிந்த போலீஸாா், அவ்வழியாக தேசிய நெடுஞ்சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனா். சந்தேகப்படும்படியான நபா்களாக இருந்தால் அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com