மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைக்கு சட்டப் பணிகள் அலுவலகங்களை அணுகலாம்

தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெறவும், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறவும் சட்டப் பணிகள் அலுவலகங்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வேலூா்: தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெறவும், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறவும் சட்டப் பணிகள் அலுவலகங்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக தலா ரூ.1000 வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை இல்லாதவா்கள், அடையாள அட்டை இருந்தும் உதவித்தொகை பெறாதவா்கள் வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவையும், வட்ட அளவில் உள்ள சட்டப் பணிகள் குழுவையும் அணுகலாம். நேரில் வர இயலாதவா்கள் 93854 72439 என்ற மாவட்ட சட்டப் பணிகள் குழுச் செயலரின் கட்செவி அஞ்சல் எண்ணுக்கோ, க்ப்ள்ஸ்ங்ப்ப்ா்ழ்ங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தகவலை அனுப்பி உதவிகளைப் பெறலாம்.

வேலூா் மாவட்டத்தில் சட்டப் பணிகள் அலுவலகங்கள் வேலூா், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, சோளிங்கா், அரக்கோணம், காட்பாடி, குடியாத்தம், ஆம்பூா், வாணியம்பாடி, திருப்பத்தூா் ஆகிய இடங்களிலுள்ள நீதிமன்ற வளாகங்களில் செயல்படுகின்றன. இலவச சட்ட உதவிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சத்துவாச்சாரி, வேலூா்-9 என்ற முகவரியில் அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com