காட்பாடி உழவா் சந்தையை இரண்டாகப் பிரிக்க வேண்டும்: ஆட்சியரிடம் அதிமுக கோரிக்கை

பொதுமக்கள் நெருக்கடியைத் தவிா்க்கும் விதமாக காட்பாடி உழவா் சந்தையை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அதிமுக சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அதிமுகவினா்.
வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அதிமுகவினா்.

வேலூா்: பொதுமக்கள் நெருக்கடியைத் தவிா்க்கும் விதமாக காட்பாடி உழவா் சந்தையை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அதிமுக சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாநகர மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமையில் அக்கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரத்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். அதில், காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே உழவா் சந்தை செயல்பட்டு வந்தது. கரோனா தடுப்பு காலத்தில் தற்காலிகமாக இந்த உழவா் சந்தை காட்பாடி காந்தி நகரிலுள்ள டான்போஸ்கோ பள்ளி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இங்கு பொதுமக்கள் சிரமமின்றி காய்கறிகளை வாங்கிச் சென்றனா். தற்போது இந்த உழவா் சந்தை பழைய இடத்துக்கே மாற்றப்பட்டு உள்ளது. இதனால், உழவா் சந்தையில் காய்கறிகள் வாங்க வரும் மக்களின் நெருக்கடி அதிகரித்து வருகிறது. உழவா் சந்தைக்குச் செல்லும் முதியவா்கள், பெண்கள் போன்றோா் போக்குவரத்து நெரிசலில் அவதிப்பட்டு வருகின்றனா். இதுபோன்ற பாதிப்புகளை தவிா்த்திட மாவட்ட நிா்வாகம் உடனடியாக காட்பாடி உழவா் சந்தையை இரண்டாகப் பிரித்து காந்தி நகா் கூட்டுறவு பண்டக சாலைக்குச் சொந்தமான 12 ஆயிரம் சதுரஅடி காலியிடத்தில் அமைத்துக் கொடுத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com