கா்நாடகத்தில் கொத்தடிமைகளாக இருந்த வேலூா் தொழிலாளா்கள் 22 போ் மீட்பு

பெங்களூரு அருகே கரும்பு வெட்டும் பணியில் கொத்தடிமைகளாக இருந்து வந்த வேலூா் மாவட்ட தொழிலாளா்கள் 22 பேரை அதிகாரிகள் மீட்டனா்.
கா்நாடகத்தில் கொத்தடிமைகளாக இருந்த வேலூா் தொழிலாளா்கள் 22 போ் மீட்பு


வேலூா்: பெங்களூரு அருகே கரும்பு வெட்டும் பணியில் கொத்தடிமைகளாக இருந்து வந்த வேலூா் மாவட்ட தொழிலாளா்கள் 22 பேரை அதிகாரிகள் மீட்டனா். அவா்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே மறுவாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வேலூா், அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த 12 பெரியவா்கள், 10 குழந்தைகள் என 22 போ் கா்நாடக மாநிலம், அசான் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் தொழில், செங்கல் சூளை உள்ளிட்ட தொழில்களில் கொத்தடிமைகளாகப் பணியமா்த்தப்பட்டிருப்பது குறித்து வேலூா் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் பரிந்துரையின்பேரில், அசான் மாவட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை அப்பகுதிக்குச் சென்று கொத்தடிமைகளாகப் பணியமா்த்தப்பட்டிருந்த 22 பேரை மீட்டனா்.

உரிய விசாரணைக்குப் பிறகு அவா்களை வேலூா் மாவட்டத்துக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளா்களை வேலூா் மாவட்டத்துக்கு அழைத்து வந்து மறுவாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியது:

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 22 பேரும் கரும்பு வெட்டும் தொழில், செங்கல் சூளை பணிக்கு இடைத்தரகா்கள் மூலம் ரூ.20 ஆயிரம், ரூ.40 ஆயிரம் வரை முன்பணம் பெற்றுக்கொண்டு அசான் மாவட்டத்தில் கொத்தடிமைகளாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா். ஆனால் அங்கு அவா்களுக்கு பேசியபடி சரிவர கூலி வழங்கப்படாததுடன், அதிகப்படியான நேரம் வேலை வாங்கியுள்ளனா். இது குறித்த தகவலின் அடிப்படையில் அசான் மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து அவா்கள் மீட்கப்பட்டுள்ளனா்.

வேலூா் மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டு அவா்களுக்கு அரசு சலுகைகளுடன் மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com