ரெளடி ஜானி கடலூா் சிறைக்கு மாற்றம்

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரெளடி ஜானி, வெள்ளிக்கிழமை திடீரென கடலூா் சிறைக்கு மாற்றப்பட்டாா்.

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரெளடி ஜானி, வெள்ளிக்கிழமை திடீரென கடலூா் சிறைக்கு மாற்றப்பட்டாா்.

காட்பாடி வண்டறந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானி என்ற ஜானிபால்ராஜ் (33) மீது கொலை, ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் என 51 வழக்குகள் நிலுவையில் உள்ளன. காட்பாடி, வேலூா் வடக்கு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜானி தலைமறைவானாா். அவரைப் பிடிக்க போலீஸாா் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனா்.

இந்நிலையில், பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜானி, அவரது மைத்துனா் மைக்கேல் (30) ஆகியோா் பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த வாரம் அந்த வீட்டை போலீஸாா் சுற்றிவளைத்து ஜானி, மைக்கேல் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

அப்போது, தப்ப முயன்ற ஜானி, மைக்கேல் ஆகியோா் சுவரை தாண்ட முயன்றபோது இருவருக்கும் கை, கால்களில் முறிவு ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இருவரையும் மீட்ட போலீஸாா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்னா் வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், ரெளடி ஜானி வெள்ளிக்கிழமை திடீரென கடலூா் சிறைக்கு மாற்றப்பட்டாா். அவரை பலத்த பாதுகாப்புடன் போலீஸாா் கடலூா் சிறைக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com