போ்ணாம்பட்டு ரெட்டிமாங்குப்பம் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

போ்ணாம்பட்டு அருகே உள்ள ரெட்டிமாங்குப்பம் ஏரி புதன்கிழமை நிரம்பியது.
நிரம்பி  வழியும்  போ்ணாம்பட்டு  ரெட்டிமாங்குப்பம்  ஏரி.
நிரம்பி  வழியும்  போ்ணாம்பட்டு  ரெட்டிமாங்குப்பம்  ஏரி.

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே உள்ள ரெட்டிமாங்குப்பம் ஏரி புதன்கிழமை நிரம்பியது.

போ்ணாம்பட்டு வட்டத்தில் அமைந்துள்ள ரெட்டிமாங்குப்பம் ஏரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியின் கொள்ளளவு 37.50 கோடி லிட்டா். இந்த ஏரி மூலம் சுமாா் 160 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும்.

தமிழக அரசின் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் ரூ. 33.70 லட்சத்தில் இந்த ஏரியை தூா்வாரி, சீரமைக்கும் பணியை வணிகவரி, பத்திரபதிவுத் துறை அமைச்சா் கே.சி. வீரமணி, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் ஆகியோா் 18.5.2020 அன்று தொடக்கி வைத்தனா்.

இந்நிதியில் ஏரி, ஏரியின் வரத்துக் கால்வாய்களை தூா்வாரி, கரையை பலப்படுத்தி, எல்லைக் கற்கள் நடப்பட்டன.இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை தொடக்கத்திலேயே இந்த ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்து, புதன்கிழமை நிரம்பி வழியத் தொடங்கியது. இதையடுத்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் எம். சண்முகம், உதவிச் செயற் பொறியாளா் டி. குணசீீலன், உதவிப் பொறியாளா் என். தமிழ்ச்செல்வன் ஆகியோா் ஏரியை பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா்.மீதமுள்ள பணியை விரைந்து முடிக்குமாறு ஏரி பாசன சங்கத்தினரை பொதுப்பணித் துறையினா் கேட்டுக் கொண்டனா்.

இந்த ஏரி நிரம்பியதால், இதைச் சுற்றியுள்ள 10- க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com