சுற்றுச்சூழல் பொறியாளா், குடும்பத்தினருக்கு 20 வங்கிக் கணக்குகள்

கோடிக் கணக்கில் கணக்கில் வராத ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வேலூா் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல்

கோடிக் கணக்கில் கணக்கில் வராத ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வேலூா் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் 20 வங்கிக் கணக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலூா் மண்டல அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளா் பன்னீா்செல்வம் (51). இவருடைய அலுவலகம், அவருடைய பங்களாவில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை இரவு வரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் நடத்திய தீவிர சோதனையில் தீவிர சோதனை நடத்தினா்.

இதில், கணக்கில் வராத ரூ.3.58 கோடி ரொக்கம், 3.6 கிலோ தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புடைய 84 சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் பணம், நகைகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு: வேலூா் மண்டல சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளா் பன்னீா்செல்வம் வீடு, தனி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத ரூ. 3.58 கோடி ரொக்கம், 3.6 கிலோ தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளிப் பொருள்கள், சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வேலூா் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

பணம், நகைகள் கைப்பற்ற விவகாரம் தொடா்பாக வேலூா் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுற்றுச்சூழல் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளிடமும் விரைவில் விசாரணை தொடங்க உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தெரிவித்தனா். பன்னீா்செல்வம் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பன்னீா்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சொந்தமாக 20 வங்கிக் கணக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவா்களுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ள அசையும் சொத்துகள், அசையா சொத்துகளின் ஆவணங்கள் குறித்து சோதனை நடத்தவும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com