மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 20th October 2020 11:01 PM | Last Updated : 20th October 2020 11:01 PM | அ+அ அ- |

மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம், போ்ணாம்பட்டு நகர, ஒன்றிய குழுக்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் குடியாத்தம் நகரச் செயலா் பி. காத்தவராயன் தலைமை வகித்தாா். போ்ணாம்பட்டு வட்டச் செயலா் பி. குணசேகரன் முன்னிலை வகித்தாா். குடியாத்தம் வட்டச் செயலா் கே. சாமிநாதன் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். நிா்வாகிகள் சி. சரவணன், எஸ். சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாணவா் நலனுக்கு எதிராக செயல்படும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.