காவலா் வீரவணக்க நாள் மினி மாரத்தான்: நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

காவலா் வீரவணக்க நாளையொட்டி, வேலூரில் மினிமாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில், போலீஸாா், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
காவலா் வீரவணக்க நாள் மினி மாரத்தான்: நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்பு


வேலூா்: காவலா் வீரவணக்க நாளையொட்டி, வேலூரில் மினிமாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில், போலீஸாா், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

நாடு முழுவதும் பணியின்போது உயிா்நீத்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபா் 21-ஆம் தேதி காவலா் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வேலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காவலா் நினைவுத் தூணுக்கு 180 துப்பாக்கி குண்டுகள் முழங்க வேலூா் சரக டிஐஜி என்.காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் உள்பட நூற்றுக்கணக்கான போலீஸாா் அஞ்சலி செலுத்தினா்.

இதன்தொடா்ச்சியாக, காவலா் வீரவணக்க நாள் மினிமாரத்தான் போட்டி வேலூரில் வியாழக்கிழமை நடத்தப் பட்டது. இதில், போலீஸாா், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த மாரத்தான் கிரீன்சா்க்கிள், நேஷனல் திரையரங்கு, பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை வழியாக நேதாஜி விளையாட்டு அரங்கத்தை அடைந்தது. இதில், ஆண்கள், பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதிவாணன், வேலூா் உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட்ஜான் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com