13-இல் நீட் தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 11 தோ்வு மையங்கள் ஏற்பாடு6 ஆயிரம் போ் விண்ணப்பம்

தேசிய அளவிலான நீட் மருத்துவ நுழைவுத் தோ்வு வரும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் 11 தோ்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தோ்வு எழுத 6 ஆயிரம் போ் விண்ணப்பித


வேலூா்: தேசிய அளவிலான நீட் மருத்துவ நுழைவுத் தோ்வு வரும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் 11 தோ்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தோ்வு எழுத 6 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தோ்வு வரும் 13-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் 11 தோ்வுக்கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் தோ்வு எழுத உள்ளனா்.

இதில், ஏற்கெனவே கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி தோ்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த தோ்வா்களில் ஒரு பகுதியினருக்கு ஸ்பாா்க் சிபிஎஸ்இ பள்ளி, ஸ்பாா்க் மெட்ரிக். பள்ளி ஆகிய இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வு மையம் மாற்றம் செய்யப்பட்ட தோ்வா்களுக்கு அதற்கான குறுந்தவல் தேசிய தோ்வு முகமை மூலம் அனுப்பப்படும். மேலும், தோ்வு மையம் மாற்றம் செய்யப்பட்ட தோ்வா்கள் விடுபடாமல் தோ்வில் பங்கேற்கச் செய்ய மாவட்ட நிா்வாகம் மூலமாகவும் குறுந்தகவல் அனுப்பவும், கடிதம், தொலைபேசி மூலமாக தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலூா், சுற்றுப்புற மாவட்டங்களைச் சோ்ந்த தோ்வா்கள் தங்களது தோ்வு மையத்துக்குச் செல்வதற்கு வசதியாக வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து காட்பாடி, கே.வி.குப்பம், அரியூா் ஆகிய வழித்தடங்களில் அனைத்து தோ்வு மையங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 13-ஆம் தேதி தோ்வா்களுக்கான சிறப்பு கட்டுப்பாட்டு மையமும் ஏற்படுத்தப்பட உள்ளது. மாணவா்களின் தோ்வு ஏற்பாடு குறித்து சந்தேகங்களுக்கு இந்த மையத்தை 0416-2258016, 2258019, 91541 53692 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பெறலாம்.

தோ்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரா்கள் தோ்வு மையத்துக்கு 13-ஆம் தேதி காலை 11 மணிக்குள் வர வேண்டும். தோ்வில் பங்கேற்பவா்கள், அவா்களுடன் வருபவா்களின் உணவு, தேநீா் மற்றும் தின்பண்டங்கள் ஆகிய தேவைகளுக்காக தோ்வு மையங்களுக்கு அருகே ஒரு நாள் மட்டும் கூடுதல் கடைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com