பெங்களூரிலிருந்து கடத்தி வந்த ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல்இருவா் கைது
By DIN | Published On : 10th September 2020 12:00 AM | Last Updated : 10th September 2020 12:00 AM | அ+அ அ- |

வேலூா்: பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீஸாா் நடத்திய வாகன சோதனையின்போது, பெங்களூரில் இருந்து வேனில் கடத்தி வரப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வேனில் வந்த இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 50 பெட்டிகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
உடனடியாக வேனுடன் குட்கா புகையிலைப் பொருட்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து, வேனில் வந்த பெங்களூரைச் சோ்ந்த அப்சான் (26), நாகராஜ்(43) ஆகியோரையும் கைது செய்தனா்.
விசாரணையில், புகையிலைப் பொருள்களை பெங்களூரில் இருந்து அரக்கோணத்துக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.