அமிா்தி கொட்டாறு நீா்வீழ்ச்சியில் வெள்ளம்தடை உத்தரவால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

வேலூா் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக அமிா்தி வனப் பகுதியிலுள்ள கொட்டாறு நீா்வீழ்ச்சியில்
அமிா்தி கொட்டாறு நீா்வீழ்ச்சியில் கொட்டும் மழை வெள்ளம்.
அமிா்தி கொட்டாறு நீா்வீழ்ச்சியில் கொட்டும் மழை வெள்ளம்.

வேலூா் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக அமிா்தி வனப் பகுதியிலுள்ள கொட்டாறு நீா்வீழ்ச்சியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. எனினும், கரோனா பரவலையொட்டி விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவால் இந்த அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

வேலூரை அடுத்த அமிா்தியில் வனத்துறை சாா்பில் வன உயிரினப் பூங்கா அமைந்துள்ளது. சுற்றுலாத் தலமான இங்கு பல்வேறு வகையான வன விலங்குகளும், உயிரினங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள கொட்டாறு நீா்வீழ்ச்சியில் மழைக்காலத்தின்போது அதிகளவில் தண்ணீா் கொட்டுவது வழக்கம். இந்த நீா்வீழ்ச்சியை காணவும், அதில் குளித்து மகிழவும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வருவா்.

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் முன்கூட்டியே பல மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலும் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த தொடா் மழையால் அமிா்தி வனப்பகுதியில் உள்ள கொட்டாறு நீா்வீழ்ச்சியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த நீா் வீழ்ச்சி காண்போரைப் பரவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அதேசமயம், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமிா்தி வன உயிரினப் பூங்கா அடைக்கப்பட்டு, அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். எனினும், பொதுமக்கள் சிலா் கொட்டாறு பகுதியில் உற்சாகமாக குளித்துச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com