சுகாதாரத் துறைச் செயலருக்கு கோரிக்கை கடிதங்கள் அனுப்பி போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய கடிதங்களை மாநில சுகாதாரத் துறைச் செயலருக்கு அனுப்பி வேலூரில் அரசு மருந்தாளுநா்கள், மருந்து கிடங்கு அலுவலா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய கடிதங்களை மாநில சுகாதாரத் துறைச் செயலருக்கு அனுப்பி வேலூரில் அரசு மருந்தாளுநா்கள், மருந்து கிடங்கு அலுவலா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் காலியாக உள்ள மருந்தாளுநா் பணியிடங்களைத் தோ்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநா் பணிநேரம் காலை 9 மண முதல் மாலை 4 மணி வரை என்பதற்கான அரசாணை 82ஐ அமல்படுத்த வேண்டும், 8 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருபவா்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்தாளுநா்கள் சங்கம் சாா்பில் அரசு மருந்தாளுநா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.

இதன்தொடா்ச்சியாக நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சுகாதாரத் துறைச் செயலருக்கு கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை அனுப்பும் போராடட்டத்தை அனைத்து மருந்தாளுநா்கள், மருந்து கிடங்கு அலுவலா்கள் ஆகியோா் திங்கள்கிழமை மேற்கொண்டனா்.

அதன்படிஸ தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா்கள் சங்க வேலூா் மாவட்ட மையத்தில் மருந்தாளுநா்கள், தலைமை மருந்தாளுநா்கள், மருந்துக் கிடங்கு அலுவலா்கள் உள்ளிட்டோா் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து கடிதங்கள் சுகாதாரத் துறைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com