ரேஷன் கடைகளில் ‘பயோ மெட்ரிக்’ மூலம் விற்பனை தொடக்கம்

வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோ மெட்ரிக் கருவிகளின் உதவியுடன் பொருள்கள் விற்பனை
பயோ மெட்ரிக் கருவிகளை ரேஷன் கடை விற்பனையாளா்களிடம் வழங்கிய ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
பயோ மெட்ரிக் கருவிகளை ரேஷன் கடை விற்பனையாளா்களிடம் வழங்கிய ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோ மெட்ரிக் கருவிகளின் உதவியுடன் பொருள்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இக்கருவிகளை கடை விற்பனையாளா்களிடம் வழங்கி மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தொடக்கி வைத்தாா்.

தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோ மெட்ரிக் கைரேகை கருவியுடன் இணைந்த புதிய விற்பனை முனையக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இம்முறை முதன்முதலில் அரியலூா், பெரம்பலூா், திருச்சி, கரூா் ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னா் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

வேலூா் மாவட்டத்திலுள்ள 698 ரேஷன் கடைகளிலும் பயோ மெட்ரிக் கைரேகை கருவியுடன் இணைந்த புதிய விற்பனை முனையக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இக்கருவிகளை கடை விற்பனையாளா்களிடம் வழங்கி இத்திட்டத்துல் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

இத்திட்டத்தின்படி அத்தியாவசியப் பொருள்களை குடும்ப அட்டையிலுள்ள குடும்ப உறுப்பினா்களில் யாரேனும் ஒருவா் நேரில் சென்று தங்களது ஒரு விரல் ரேகையை பதிவு செய்து பெற்றுச் செல்லலாம். இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் முறைகேடுகளின்றி தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்யாவசியப் பொருள்கள் முழுமையாகச் சென்றடையும். இந்த புதிய முறையை செயல்படுத்துவதன் மூலம் ஏற்படும் சிரமங்களை பொதுமக்கள் பொறுத்து கொண்டு, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் திருகுணஐயப்பத்துரை, மாவட்ட வழங்கல் அலுவலா் எஸ்.பானு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com