வேலூா் மாவட்டத்தில் மேலும் 135 பேருக்கு கரோனா

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு செவ்வாய்க்கிழமை வரை 13 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை மேலும் 135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில்

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு செவ்வாய்க்கிழமை வரை 13 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை மேலும் 135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,135-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, மாவட்டத்தில் இதுவரை 11,742 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். 197 போ் உயிரிழந்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 91 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,129 -ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 11, 441 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 540 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் 148 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com