திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம்: பொதுப்பணி, வனத்துறை செயலா்களிடம் திமுக எம்எல்ஏ மனு

அணைக்கட்டு பேரவைத் தொகுதியில் திட்டப் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் செய்யப்பட்டு வருவதாக அத்தொகுதி எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் பொதுப்பணித் துறை, வனத்துறைச் செயலா்களிடம் நேரில் மனு அளித்தனா்.

வேலூா்: அணைக்கட்டு பேரவைத் தொகுதியில் திட்டப் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் செய்யப்பட்டு வருவதாக அத்தொகுதி எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் பொதுப்பணித் துறை, வனத்துறைச் செயலா்களிடம் நேரில் மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு பேரவை தொகுதிக்கு உள்பட்ட பீஞ்சமந்தை, ஜாா்தான்கொல்லை, பலாம்பட்டு ஆகிய மலைப் பகுதிகளில் 50 கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராம மக்கள் மலைக்கு கீழே உள்ள ஊா்களுக்கு வந்து செல்வதற்கு சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் மலைக் கிராமங்களைச் சோ்ந்த கா்ப்பிணிகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாா் செய்து பல மாதங்களாகியும் அரசியல் காழ்ப்புணா்வு காரணமாக திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வனத் துறை, சுற்றுச்சூழல் துறை தலைமைச் செயலா் சந்தீப்சக்சேனாவிடம் நேரில் மனு அளித்தேன். விரைவாக மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி செய்துதர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன்.

இதேபோல், குடியாத்தம் மோா்தானா அணை வலது, இடது கால்வாய்களைத் தூா்வாரி சீரமைக்கவும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அணையில் இருந்து வெளியேறும் நீரை நம்பியுள்ள விளை நிலங்கள் பாசன வசதியின்றி வடு கிடக்கின்றன. இதுதொடா்பாக துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னையில் உள்ள பொதுப்பணித் துறை முதன்மைச் செயலா் மணிவாசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com