வரி செலுத்தாமல் இயங்கிய ஆம்னி பேருந்து பறிமுதல்


வேலூா்: வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதாக வேலூரில் ஆம்னி பேருந்தை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

வேலூா் வட்டார போக்குவரத்து அலுவலா் செந்தில்வேலன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கருணாநிதி, சக்திவேல், ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோா் பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் புதன்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், அந்த ஆம்னி பேருந்து வரிசெலுத்தாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் அந்த ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்தனா்.

தற்போது கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சென்னை, பெங்களூரு உள்பட வெளியூா்களில் பணிபுரிவோா் சொந்த ஊா்களுக்கு அதிகளவில் திரும்பிச் செல்கின்றனா். இதை வாய்பாக பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்பட்டால் வாகனம் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com