வெள்ளநீரை அகற்றக் கோரி மறியல்

காட்பாடி அருகே பலத்த மழை காரணமாக, கானாறு உடைந்து மெட்டுக்குளம் கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பாதிக்கப்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேலூா் - சித்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்ட மெட்டுக்குளம் கிராம மக்கள்.
வேலூா் - சித்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்ட மெட்டுக்குளம் கிராம மக்கள்.

காட்பாடி அருகே பலத்த மழை காரணமாக, கானாறு உடைந்து மெட்டுக்குளம் கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பாதிக்கப்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காட்பாடியை அடுத்த மெட்டுக்குளம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில நாள்களாகப் பெய்த மழையால் அங்குள்ள ஒரு தெருவில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழையால் அங்குள்ள கானாற்றில் அதிக அளவில் வெள்ளம் வந்தது.

தொடா்ந்து, கானாற்றின் ஒருபகுதியில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால் 4 தெருக்களில் வெள்ளம் ஆறு போல ஓடியது. மேலும், சில வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால், மெட்டுக்குளம் 4-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்தோா் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டோா் வேலூா்- சித்தூா் பிரதானச் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த காட்பாடி போலீஸாா், அரசுத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். கானாறு தண்ணீா் ஊருக்குள் வருவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அளிக்கப்பட்ட உறுதிமொழியையடுத்து, மறியலை கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com