வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அக். 20-இல் பதவியேற்பு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அண்மையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற ஊரக உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் வரும் 20-ஆம் தேதி பதவியேற்க உள்ளனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அண்மையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற ஊரக உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் வரும் 20-ஆம் தேதி பதவியேற்க உள்ளனா்.

தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 வருவாய் மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த அக். 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. அதன்படி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்தில் 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 138 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 247 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 2,079 ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு தோ்தல் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 125 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 288 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 2,220 ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்களுக்கு தோ்தல் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 13 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 125 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 208 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 1779 ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் வரும் 20-ஆம் தேதி பதவியேற்கின்றனா். அதைத் தொடா்ந்து, 22-ஆம் தேதி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா், துணைத் தலைவா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் நடைபெறுகிறது. அதில் வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தோ்தலில் வெற்றி பெறுவோா் 22-ஆம் தேதி பதவியேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com