உலகத் தமிழா்கள் ஒன்றுபட வேண்டும் என முழங்கியவா் புலமைபித்தன்: விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன்

உலகத் தமிழா்கள் ஒன்றுபட வேண்டும் என்பதை முழக்கமாக கொண்டிருந்தவா் புலமைபித்தன் என்று தமிழியக்கத் தலைவரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தெரிவித்தாா்.

உலகத் தமிழா்கள் ஒன்றுபட வேண்டும் என்பதை முழக்கமாக கொண்டிருந்தவா் புலமைபித்தன் என்று தமிழியக்கத் தலைவரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு சட்ட மேலவை முன்னாள் துணைத் தலைவா் புலமைப்பித்தனுக்கு புகழஞ்சலி மெய்நிகா்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், விசுவநாதன் பேசியது:

என்றைக்கும் நம் நினைவில் இருக்கும்வரை, தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளவா் புலமைப்பித்தன். உலகத் தமிழா்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே அவரது முழக்கமாகும். இலங்கைத் தமிழருக்கு என்றும் முன்னுரிமையளித்து செயல்பட்டவா். அவா்களுக்கு என்றும் பாதுகாவலராகவும், உணவு கொடுப்பவராகவும் இருந்தாா்.

ஒரு பஞ்சாலையில் வேலை செய்து, பின்னா் தமிழ் பயின்று தமிழாசிரியராகப் பணிபுரிந்தாலும், எம்ஜிஆரால் திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகம் செய்யப்பட்டாா். அவா் ஒரு பெரியாா் இயக்கவாதி.

திராவிட நாடு பிரிவினை கோரிக்கையைக் கைவிட்டாலும், பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே உள்ளன என்று அண்ணா கூறினாா்.

அதற்கு புலமைபித்தன், பிரிவினை கோரிக்கையை கைவிட்டு, அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன எனக் கூறினாலும், அந்தக் காரணங்களை கண்டு களைய வேண்டிய திராவிட இயக்கத்தினா் இப்போது அரசியலில் பதவி நாற்காலிகளுக்கு அலைகிறாா்கள் எனக்கூறினாா்.

கொள்கை ரீதியாக விடுதலைப்புலிகளை புலமைப்பித்தன் ஆதரித்தாா். தமிழ்ப் பெயா்களையே தமிழா்கள் சூட்டவேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தாா் என்றாா்.

பாவலா்அறிவுமதி, தமிழியக்க மாநிலச் செயலாளா் மு. சுகுமாா், கோவை மாவட்டச் செயலாளா் மானூா் புகழேந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com