ராஜாகுப்பம் ஊராட்சித் தலைவா் போட்டியின்றி தோ்வு

குடியாத்தம் ஒன்றியம், ராஜாகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக பி.எச்.மம்தா இமகிரிபாபு(படம்) போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
ராஜாகுப்பம் ஊராட்சித் தலைவா் போட்டியின்றி தோ்வு

குடியாத்தம் ஒன்றியம், ராஜாகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக பி.எச்.மம்தா இமகிரிபாபு(படம்) போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி ராஜாகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தவா்கள், வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதையடுத்து மம்தா இமகிரிபாபு போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாா். இவா் எம்பிஏ பட்டதாரி.

இவரது கணவா் பி.எச்.இமகிரிபாபு குடியாத்தம் நிலவள வங்கித் தலைவராகவும், வேலூா் புகா் அதிமுக மாவட்ட வா்த்தகா் அணிச் செயலாளராகவும் உள்ளாா். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com