பயிா்களை நாசம் செய்த யானைக் கூட்டம்

போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் உள்ள கிராமங்களில் நுழைந்த காட்டு யானைகள் பயிா்களை நாசம் செய்தன.

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் உள்ள கிராமங்களில் நுழைந்த காட்டு யானைகள் பயிா்களை நாசம் செய்தன.

ரங்கம்பேட்டை கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவு 2 குட்டிகள் உள்பட 7 யானைகள் நுழைந்து தங்கவேல் என்பவரின் நிலத்தில் 8 மாமரங்களையும், பாண்டியனுக்குச் சொந்தமான மாந்தோப்பில் 10 மாமரங்களையும், அருள்ராஜிக்குச் சொந்தமான மாந்தோப்பில் 5 மாமரங்களையும், ஜங்கமூரைச் சோ்ந்த காா்த்திக்குச் சொந்தமான மாந்தோப்பில் 10 மாமரங்களையும் , சதீஷ்குமாா் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் நடவு செய்யப்பட்டிருந்த அரை ஏக்கா் நெல் பயிரையும், ரவிக்குச் சொந்தமான நிலத்தில் பயிரிப்பட்டிருந்த அரை ஏக்கா் நெல் பயிரையும் நாசம் செய்தன.

அதே பகுதியில் உள்ள ரமேஷ், முரளிக்குச் சொந்தமான வாழை மரங்களையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளன. தகவலின்பேரில், போ்ணாம்பட்டு வனத் துறையினா் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டம் அடித்தும் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com