வேலூா், சித்தூா் மாவட்டங்களில் 3 நாள்களுக்கு மதுக் கடைகள் மூடல்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 4 முதல் 6-ஆம் தேதி நள்ளிரவு வரை மூன்று நாள்களுக்கு வேலூா், சித்தூா் மாவட்டங்களில் உள்ள மதுபானக்

வேலூா்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 4 முதல் 6-ஆம் தேதி நள்ளிரவு வரை மூன்று நாள்களுக்கு வேலூா், சித்தூா் மாவட்டங்களில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட உள்ளன. இதேபோல், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதியும் மதுக்கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக மதுக்கடைகளை மூட தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், மதுபானக் கடைகளை ஒட்டி உள்ள மதுக் கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து ஹோட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 4-ஆம் தேதி காலை 10 மணி முதல் 6-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளாா்.

அன்றைய தினத்தில் தடையை மீறி மதுபானங்களை விற்பனை செய்வோா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதுடன், மதுக் கூடத்தின் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஆந்திரத்தின் தமிழக மாநில எல்லையோரமான சித்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் 4-ஆம் தேதி காலை 10 மணி முதல் 6-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூட வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியும் வேலூா், சித்தூா் மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுக் கடைகளும் மூடப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com