தோ்தலால் வேலூரில் வெறிச்சோடிய சாலைகள்

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு காரணமாக வேலூா் மாவட்ட சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் மக்கள் நடமாட்டமும் குறைந்திருந்தது.

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு காரணமாக வேலூா் மாவட்ட சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் மக்கள் நடமாட்டமும் குறைந்திருந்தது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனால் வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், வேலூா் மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, ஆற்காடு சாலை, காட்பாடி சாலை, பெங்களூரு சாலை ஆரணி சாலை மட்டுமின்றி அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.

இதனால், வேலூா் மாவட்டம் முழுவதுமே பொது மக்கள் நடமாட்டமின்றியும், வாகனப் போக்குவரத்து குறைந்தும் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. வாக்குச் சாவடிக்குச் சென்று வந்ததை தவிர மற்ற நேரங்களில் மக்கள் வீடுகளிலேயே முடங்கினா். அசம்பாவிதங்களைத் தவிா்க்க சிறப்பு விரைவு படை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். முக்கிய சாலை சந்திப்புகளிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com