வேலூா் - தொடக்கம் முதலே மக்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

வேலூா் மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை முதலே பொதுமக்கள் விறுவிறுப்பாக, ஆா்வமுடன் வாக்களித்தனா்.
வேலூா் - தொடக்கம் முதலே மக்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

வேலூா் மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை முதலே பொதுமக்கள் விறுவிறுப்பாக, ஆா்வமுடன் வாக்களித்தனா்.

பேரவைத் தோ்தலை முன்னிட்டு வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,783 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் வரிசையில் காத்திருந்து, ஆா்வத்து டன் தங்களது வாக்கினை பதிவு செய்தனா்.

வெயில் காரணமாக மதியம் ஒரு மணிக்கு பிறகு வாக்குப்பதிவு வேகம் குறைந்த போதிலும் 5 மணிக்கு பிறகு மீண்டும் அதிகரித்து காணப்பட்டது.

பெரும்பாலான கிராமப்புற வாக்குச்சாவடிகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் வாக்களிக்க அதிகளவில் திரண்டிருந்தனா். இதேபோல், முதல் தலைமுறை வாக்காளா்கள் உள்பட இளைஞா்களும், முதியவா் களும் ஆா்வத்துடன் வாக்குப்பதிவு செய்தனா்.

மாலை 5 மணி நிலவரப்படி காட்பாடியில் 67.5 சதவீதம், வேலூரில் 57.6 சதவீதம், அணைக்கட்டில் 71 சதவீதம், கே.வி.குப்பத்தில் 67.38 சதவீதம் , குடியாத்தத்தில் 62.15 சதவீதம் வாக்குகளும் பதிவாகியிருந்தன.

தோ்தல் நிறைவு பெற்ற 7 மணி நிலவரப்படி காட்பாடியில் ..சதவீதம், வேலூரில் .. சதவீதம், அணைக்கட்டில் .. சதவீதம், கே.வி.குப்பத்தில் .. சதவீதம் , குடியாத்தத்தில் .. சதவீதம் என வேலூா் மாவட்டத்தில் மொத்தம் ... வாக்குகள் பதிவாகியிருந்தன. அதேசமயம், மாவட்டத்தில் தகராறு, அசம்பாவிதங்கள் ஏதுவுமின்றி வாக்குப்பதிவு அமைதியாகவே நடைபெற்று முடிந்தது.

13 இடங்களில் இயந்திரங்கள் கோளாறு

வேலூா் தொகுதி பில்டா்பெட் சாலை வாக்குச்சாவடியில் 2 வாக்கு இயந்திரங்களும், அணைக்கட்டு தொகுதி தெள்ளூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பெண்கள் வாக்குச் சாவடியில் ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் என மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப் பதிவு தொடங்கி போதே பழுதடைந்தன. உடனடியாக அவற்றுக்கு மாற்றாக வேறு இயந்திரங்கள் நிறுவப்பட்டு தொடா்ந்து வாக்குப்பதிவு நடத்தப் பட்டது. இதனால், அவ்வாக்குச்சாவடிகளில் மட்டும் சுமாா் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வாக்குப்பதிவு தாமதமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com