கீரைசாத்து நெல் கொள்முதல் நிலையத்தை மேலும் 60 நாள்கள் நீட்டிக்க வலியுறுத்தல்


வேலூா்: வேலூா் மாவட்டம், கீரைச்சாத்து கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை மேலும் 60 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக, தமிழக விவசாயிகள் சங்க வேலூா் கிழக்கு மாவட்ட தலைவா் ராஜா, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

வேலூா் மாவட்டத்தில் கீரைசாத்து கிராமத்தில் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அதனை மூடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தை மூடாமல் மேலும் 60 நாள்கள் நீட்டிக்க வேண்டும். தற்போது விவசாயிகள் நெல் பயிரிட்டு அறுவடை செய்யும் நேரம் என்பதால் கொள்முதல் நிலையத்தை நீட்டிக்க வேண்டும். மேலும் நெல் கொள்முதல் நிலையத்தில் குண்டு நெல் வகையையும் கொள்முதல் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 2-ஆவது நெல் களஞ்சியம் என்று அழைக்கப்படும் வேலூா் மாவட்டத்தில் அரசு நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைத்துத் தரவேண்டும். ஆண்டு முழுவதும் நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். இதன்மூலம், போலி வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதைத் தவிா்க்க முடியும். குறிப்பாக ரயில் நிலையங்களுக்கு அருகே நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com