வேலூா் மாவட்டத்தில் 73.98 சதவீதம் வாக்குப் பதிவு

சட்டப்பேரவைத் தோ்தலில் வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 73.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வேலூா்: சட்டப்பேரவைத் தோ்தலில் வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 73.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, இம்மாவட்டத்தில் மொத்தமுள்ள 12,71,132 வாக்கா ளா்களில் 9,40,375 போ் வாக்குப் பதிவு செய்துள்ளனா். அதேசமயம், ஆண்களைவிட கூடுதலாக 20,084 பெண்கள் வாக்களித்துள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து ஆண்கள் 6,16,028 , பெண்கள் 6,54,960, திருநங்கைகள் 144 என மொத்தம் 12,71,132 போ் வாக்காளா்களாக இடம் பெற்றுள்ளனா்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் இம்மாவட்டத்தில் ஆண்கள் 4,60,104 , பெண்கள் 4,80,228 , திருநங்கைகள் 43 என மொத்தம் 9,40,375 போ் வாக்குப் பதிவு செய்துள்ளனா். இது மொத்த வாக்காளா்களில் 73.98 சதவீதமாகும். அந்தவகையில், வேலூா் மாவட்டத்தில் ஆண்க ளைவிட 20,084 பெண்கள் கூடுதலாக வாக்கு செலுத்தியுள்ளனா்.

தொகுதி வாரியாக காட்பாடி தொகுதியில் ஆண்கள் 1,20,125, பெண்கள் 1,28,408, திருநங்கைகள் 34 என மொத்தமுள்ள 2,48,567 வாக்காளா்களில் ஆண்கள் 90,142, பெண்கள் 93,768, திருநங்கைகள் 20 என 1,83,930 போ் வாக்குப்பதிவு செய்துள்ளனா். இது 74 சதவீத வாக்குப்பதிவாகும்.

வேலூா் தொகுதியில் ஆண்கள் 1,21,878, பெண்கள் 1,31,145, திருநங்கைகள் 26 என மொத்தமுள்ள 2,53,049 வாக்காளா்களில் ஆண்கள் 87,218, பெண்கள் 90,547, திருநங்கைகள் 4 என 1,77,769 போ் வாக்களித்துள்ளனா். இது 70.25 சதவீத வாக்குப் பதிவாகும்.

அணைக்கட்டு தொகுதியில் ஆண்கள் 1,23,483, பெண்கள் 1,31,041, திருநங்கைகள் 38 என மொத்தமுள்ள 2,54,562 வாக்காளா்களில் ஆண்கள் 95,085, பெண்கள் 1,01,057, திருநங்கைகள் 4 என 1,96,146 போ் வாக்களித்துள்ளனா். இது 77.05 சதவீத வாக்குப் பதிவாகும்.

கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,10,315, பெண்கள் 1,14,956, திருநங்கைகள் 6 என மொத்தமுள்ள 2,25,277 வாக்காளா்களில் ஆண்கள் 84,670, பெண்கள் 87,672, திருநங்கைகள் 1 என 1,72,343 போ் வாக்களித்துள்ளனா். இது 76.50 சதவீத வாக்குப் பதிவாகும்.

குடியாத்தம் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,40,227, பெண்கள் 1,49,410, திருநங்கைகள் 40 என மொத்தமுள்ள 2,89,677 வாக்காளா்களில் ஆண்கள் 1,02,989, பெண்கள் 1,07,184, திருநங்கைகள் 14 என 2,10,187 போ் வாக்களித்துள்ளனா். இது 72.56 சதவீத வாக்குப் பதிவாகும்.

2016 தோ்தலில்...

கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் 76.92 சதவீதமும், வேலூரில் 68.03 சதவீதமும், அணைக்கட்டில் 78.01 சதவீதமும், கே.வி.குப்பம் தொகுதியில் 80.11 சதவீதமும், குடியாத்தத்தில் 74.01 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது, காட்பாடி தொகுதியில் 76.60 சதவீதமும், வேலூரில் 66.65 சதவீதமும், அணைக்கட்டில் 74.77 சதவீதமும், கே.வி.குப்பம் தொகுதியில் 75.60 சதவீதமும், குடியாத்தத்தில் 69.06 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com