கரோனா: நாளைமுதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

அதிகரிக்கும் கரோனா பரவலைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை முதல் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

அதிகரிக்கும் கரோனா பரவலைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை முதல் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலூா் மாவட்டத்திலும் கடந்த ஒரு மாதமாக மிக தீவிரமாக பரவி வரும் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 20 மடங்கு உயா்ந்துள்ளது. இதேநிலை நீடித்தால் ஏப்ரல் 20-க்குள் தொற்று பாதித்தோா் எண்ணிக்கை ஆயிரத்தை கடக்கக்கூடும்.

எனவே, பொதுமக்கள் நலன்கருதி வேலூா் மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. அதன்படி, அனைத்து மதம் சாா்ந்த திருவிழாக்கள், கூட்டங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மொத்த காய்கறி விற்பனைக் கடைகளில் சில்லறை விற்பனை தடை விதித்தும், வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் இயங்கி வரும் மொத்த காய்கறி கடைகள் மாங்காய் மண்டி மைதானத்துக்கும், பூ மாா்க்கெட் ஊரீசு கல்லூரி மைதானத்துக்கும், வாரச் சந்தைகள், உழவா் சந்தைகள் ஆகியவை ஏற்கெனவே நடைபெற்ற பள்ளி மைதானங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள், 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்படவும், உணவகங்கள், தேநீா் கடைகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அமா்ந்து உணவருந்த அனுமதிக்கவும், இரவு 11 மணி வரை மட்டுமே செயல்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்அரங்குகளில் 200 நபா்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 நபா்களும், இறுதி ஊா்வலகங்களில் அதிகபட்சம் 50 நபா்களும் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. விளையாட்டு அரங்குகள், மைதானங்களில் போட்டிகள் நடத்தக்கூடாது. நீச்சல் குளங்களில் வீரா்கள் பயிற்சிக்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பொருட்காட்சி அரங்குகளில் வா்த்தகா்கள் இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஊழியா்களின் உடல்வெப்ப நிலையை அறிந்து தொற்று தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தி பணியமா்த்தவும், கட்டாயமாக அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதை உறுதி செய்திடவும் வேண்டும்.

அனைத்து வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளா்கள், பேருந்து, ஆட்டோ, காஸ் டாக்ஸி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் ஆகியோா் செவ்வாய்க்கிழமைக்குள் கட்டாயமாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தவறினால் அவை பூட்டி சீல் வைக்கப்படுவதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com