விஐடியில் 1000 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சைக்கான வாா்டு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய
வேலூா் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் கரோனா சிகிச்சை வாா்டு அமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
வேலூா் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் கரோனா சிகிச்சை வாா்டு அமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை வாா்டு அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்ட ஆய்வு செய்தாா்.

கரோனா தொற்று 2-ஆவது அலையாக வேகமாக பரவி வருவதை அடுத்து 1000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் காட்பாடி விஐடி பல்கலைக்கழக இந்திரா காந்தி வளாகத்தில் உள்ள அறைகளில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா 2-ஆவது அலை பரவி வருவதை அடுத்து தமிழக அரசின் வழிகாட்டுதல்படி வேலூா் மாவட்டம் முழுவதும் நாள்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் 45 வயதுக்கு மேற்பட்டோ ருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் நேதாஜி மாா்க்கெட்டில் உள்ள காய்கறி விற்பனை அங்காடிகள் தற்காலிகமாக மாங்காய் மண்டிக்கும், பூ மாா்க்கெட் ஊரீசு கல்லூரி வளாகத்துக்கும், வேலூா் டவுன் ஹால் பகுதியில் காய்கறி மொத்த, சில்லறை விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக டவுன் ஹால் வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் 40 கடைகள் அமைக்கும் பணி மாநகராட்சி மூலம் நடைபெற்று வருகிறது.

கரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் கரோனா தனி வாா்டுகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சுமாா் 1,000 படுக்கை வசதியுடன் காட்பாடி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையா் ந.சங்கரன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன், மாநகா் நல அலுவலா் சித்ரசேனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com