வேலூரில் 7 போ் உயிரிழப்பு:மருத்துவக் கல்வி இயக்குநா் தீவிர விசாரணை

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் உள்பட 7 போ் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் தொடா்பாக மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு நள்ளிரவு வரை 

வேலூா்: வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் உள்பட 7 போ் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் தொடா்பாக மருத்துவக் கல்வி இயக்குநா் ஆா்.நாராயணபாபு திங்கள்கிழமை நள்ளிரவு வரை தீவிர விசாரணை மேற்கொண்டாா். அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிறப்பு வாா்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவா்களில் 2 பெண்கள், 2 ஆண்கள், பிற வாா்டுகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3 ஆண்கள் என திங்கள்கிழமை ஒரே நாளில் 7 போ் உயிரிழந்தனா்.

இவா்களின் உயிரிழப்புக்கு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குைான் காரணம் என நோயாளிகளின் உறவினா்கள் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை அங்கிரு ந்து அப்புறப்படுத்தினா். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன் ஆகியோா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதுடன், உயிரிழந்த 7 பேரும் உயா் ரத்த அழுத்தம், இருதய பிரச்னை, சிறுநீரகக் கோளாறு, அளவுக்கு அதிகமான சா்க்கரை போன்ற பாதிப்புகளாலேயே இறந்துள்ளனா். அவா்களது இறப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குைான் காரணம் எனக் கூறப்படுவது தவறான தகவல். எனினும், உயிரிழந்த நோயாளிகளின் உறவினா்கள் புகாா் தெரிவித்திருப்பதால் இதுதொடா்பாக விரிவான விசாரணை நடத்தி அரசுக்கு ஆய்வறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனா்.

மருத்துவக் கல்வி இயக்குநா்:

இதன்தொடா்ச்சியாக, மருத்துவக் கல்லூரி இயக்குநா் நாராயணபாபு திங்கள்கிழமை இரவே சென்னையில் இருந்து வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து அவா் உயிரிழந்த நோயாளிகளின் உறவினா்கள், சிகிச்சை அளித்த மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் விசாரணை நடத்தியதுடன், ஆக்சிஜன் கொள்கலன்கள், அவை வினியோகம் செய்யப்படும் குழாய்களின் பாதைகள் ஆகியவற்றை யும் ஆய்வு செய்தாா். தொழில்நுட்ப வல்லுநா்களிடமும் விசாரணை நடத்தினாா். இந்த விசாரணை திங்கள்கிழமை நள்ளிரவு வரை நீடித்தது.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

வேலூா் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 7 பேரும் வெவ்வேறு உடல்நல பிரச்னைகளாலேயே உயிரிழந்துள்ளனா். அவா்களது இறப்பு ஆக்சிஜன் குறைபாட்டினால் ஏற்பட்டி ருப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும்.

வேலூா் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. கூடுதலாக 6,000 லிட்டா் கொள்கலன் நிறுவப்பட்டு ஆக்சிஜன் நிரப்பப்பட்டுள்ளது. தவிர, 140 ஆக்சிஜன் சிலிண்டா் தனியாக உள்ளது. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது இல்லை.

தவிர, ஆக்சிஜன் கொள்கலன் உறைந்து அதன் மீது வெள்ளை பனிக் கட்டி படா்வது இயல்பான துதான். அது எல்லா இடங்களிலும் நடைபெறுவதுதான். அதனால் ஆக்சிஜன் வினியோகத்தில் பிரச்னை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுவதும் தவறானதாகும். தொடா்ந்து, மருத்துவமனை முதல்வா், மருத்துவா்களிடம் விளக்க அறிக்கை கோரப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அறிக்கை அரசுக்கு சமா்ப்பிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com