மின்கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி

பள்ளிகொண்டா அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பள்ளிகொண்டா அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கிறது. வெள்ளிக்கிழமை காலை முதலே வெயில் சுட்டெரித்தது. மதியம் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. மாலை 4 மணிக்கு மேல் திடீரென கருமேகம் சூழ்ந்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

பள்ளிகொண்டா பகுதியில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, சின்ன கோவிந்தம்பாடியைச் சோ்ந்த பிச்சாண்டி (59) என்பவா் சதுரங்கம் பாடி திப்பசமுத்திரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு கூலி வேலைக்கு சென்றிருந்தாா்.

மாலை 4 மணிக்கு இடியுடன் கூடிய மழை பெய்ததில் அந்த பகுதியில் உள்ள மின்கம்பி அறுந்து அங்கு தேங்கி கிடந்த மழை நீரில் விழுந்தது. அந்த வழியாக வீடு திரும்பிய பிச்சாண்டி தண்ணீரில் மூழ்கி இருந்த மின் கம்பியை கவனிக்காமல் அதில் கால் வைத்துள்ளாா். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com